ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு மத்திய அரசு எடுத்த பல தவறான முடிவுகள் தான் காரணம் என, மாருதி நிறுவனத்தின் தலைவர் பர்கவா கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள காரணங்களை கீழே காணலாம்.
வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரி ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என அவர் தெரிவித்துள்ளனர்.
28% ஜிஎஸ்டி வரி இருந்ததால் கார் வாங்கும் ஆசை இருந்தாலும் சாமானியர்கள் கார் வாங்க முடியவில்லை என தெரிவித்துள்ள அவர் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்தாலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது என கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் மாநில அரசின் சாலை வரியால் கார் வாங்க நினைப்பவர்களின் எண்ணிக்கை சரிந்து விட்டதாகவும், வாகன பதிவு தொகை உயர்வு போன்ற செயல்கள் நடுத்தர மக்களுக்கு கார் வாங்கும் எண்ணத்தை மாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நான்கு சக்கர வாகனங்களில் ஏர்பேக் போன்ற தொழில்நுட்பங்கள் கட்டாயமாக்கப்பட்டதால் கார்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் கார்களை வாங்கி அதனை பராமரிக்கும் அளவிற்கு சாமானியனின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.