கடந்த இரண்டு நாள்களைத் தொடர்ந்து இன்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 396.19 புள்ளிகள் உயர்ந்து 40,444. 99 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.75 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 14,777.75 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.87 சதவிகிதம் உயர்வாகும்.
பங்குச்சந்தை சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 நிறுவனப் பங்குகளில் 25 நிறுவனங்களின் பங்குகள் ஆதாயத்துடன் தொடங்கியுள்ளன.
அதிகபட்சமாக இந்துஸ் இண்ட் வங்கி 7.98 சதவிகிதமும், எம் & எம் 4.60 சதவிகிதமும், பவர் கிரிட் 3.83சதவிகிதமும் உயர்ந்துள்ளது.