விரைவில் D.இமான் இசையில் பாடப்போகும் சிறுவன்.!(வீடியோ இணைப்பு)

சமீப நாட்களில் சமூக வலைத்தளங்கள் மூலமாக அடையாளம் காணப்பட்டு,  பல பாடகர்கள் உருவாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி எனும் சிறவன் விஸ்வாசம் பாடத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பாடிவுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டையும் பெற்று வைரலாகி வருகிறது.

திருமூர்த்தி பாடிய கண்ணான கண்ணே பாடல்

இந்நிலையில் திருமூர்த்தியின் வீடியோவை இசைமைப்பாளர் D .இமான் மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் உள்ளிட்டோர் தங்களுடைய டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அந்த பகிர்வில் இசையமைப்பாளர் இமான் அவர்கள் வீடியோவை மேலும் நிறைய பகிரவும், திருமூர்த்தியின் தொடர்பு எண் கிடைத்தால் இங்கு பகிருங்கள் என கேட்டு இருந்தார்.

தற்போது திருமூர்த்தியின் தொடர்பு எண் தனக்கு அனுப்பிய அனைவருக்கும் நன்றி எனவும், கூடிய விரைவில் தான் இசை அமைக்கும் பாடத்தில் திருமூர்த்திக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக இமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருமூர்த்தி சிறுவயதிலேயே பார்வையற்றவர், தாயை இழந்தவர் ஆனாலும் இன்றும் தன்னுடைய தாயை நினைத்து அவருடைய குரலில் உருகி பாடுவதன் மூலம் நொச்சிப்பட்டி கிராமத்தையே தன்னுடைய குரலால் கட்டிப்போட்டுள்ளார்.

மேற்கு வங்க ரயில் பாடகி Ranu Mondal பாடிய ஏக் பியார் பாடல் சமூக வலைத்தளங்களில் வைராலாகி இன்று பாலிவுட்டில் ராணுவுக்காக தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல திருமூர்த்தியும் இசை உலகில் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார்.

கூடிய விரைவில் தமிழ் திரைப்படங்களில், திருமூர்த்தி பாடி தமிழகத்தையே தன் குரலால் கட்டிப்போடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே