இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் அரைநிர்வாண புகைப்படம் ட்விட்டரில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். விண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்களின் போது, சக வீரரான ரோகித் சர்மா சேர்க்கப்படாதது குறித்து கோலி மீது விமர்சனம் இருந்து வந்தது. அவர் தனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்து வந்தார்.
As long as we look within, we won’t need to seek anything outside.
விண்டீஸ் தொடரில் முகமது சமி அணியில் சேர்க்கப்பட்ட போது கடும் விமர்சனம் எழுந்தது. அந்த நேரத்தில் கருத்து தெரிவித்த கோலி, அணிக்கு யார் தேவையோ அவர்களை சேர்க்கிறேன் என்று பதிலடி கொடுத்திருந்தார்.
தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ட்விட்டரில் பதில் அளித்து வரும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டில் கேப் சேலஞ்ச் என்ற வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது.
இதைப்போன்று நேற்று மேல்சட்டை அணியாமல் அரைநிர்வாணமாக அமர்ந்து, கால்களை கைகளோடு கோர்த்து அவர் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன், “உள்ளே எட்டிப் பார்த்த பிறகு, வெளியே எதையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை” என்று பரபரப்பு வாசகங்களை எழுதியுள்ளார்.
இந்த அரைநிர்வாண புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்திற்கு கோலி ரசிகர்கள் பலரும் பலவிதமாக விமர்சனங்கள் எழுதி வருகிறார்கள்.
அவரது ரசிகர் ஒருவர், “என்ன நடந்தது? அனுஷ்கா வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைப்போன்று மற்றொருவர், “என்ன தம்பி… யாராவது புண்படுத்திவிட்டார்களா?” என்று கேட்டுள்ளார்.
மேலும், சிலர் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இந்தப் புகைப்படத்தை உற்றுப்பார்ப்பது போன்றும் புகைப்படங்களை இடுகையிட்டு வருகின்றனர். இதையொட்டி, விராட் கோலியின் புகைப்படமும், பரபரப்பு வாசகமும் இணைய தளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.