தென்னிந்தியாவில் மூன்று நாட்களுக்கும் வடமாநிலங்களில் பத்து நாட்களுக்கும் விநாயகர் சதூர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், திருச்சி உச்சி பிள்ளையார் மாணிக்கவிநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர், கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஆங்காங்கே அமைக்கப்பட்ட விநாயகர் பந்தலிலும், பிள்ளையார் கோவில்களிலும் மக்கள் முழுமுதற் கடவுளை வழிபடுகின்றனர்.
பெங்களூருவில் உள்ள ஒரு பிள்ளையார் கோவில் சுமார் 9 ஆயிரம் தேங்காய்கள் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலை காண்போரை கவர்கிறது. ஏராளமான பக்தர்கள் தேங்காய் படையல் இட்டு விநாயகரை வணங்கி வருகின்றனர்.
நவராத்திரி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் அவற்றின் தொடக்கமாக இந்த விழா கருதப்படுகிறது.