விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஐந்துகரத்தான் என அழைக்கப்படும் விநாயகர் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

“வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே” என்பதற்கேற்ப வினைகளை களைந்தெறியும் தெய்வமான விநாயகர் சதுர்த்தி திருநாள் உற்சாகமாக கொண்டாடப் படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளும் விநாயகரின் அவதார நாளில், வீடெங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும் நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே