வருமான வரி கணக்கு தாக்கலுக்கு கெடு இன்றுடன் முடிவடைகிறது.
கடந்த 2018 19 ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்தை வருமான வரி படிவத்தை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். அதற்குள் வருமான வரி படிவம் தாக்கல் செய்யாவிட்டால் தாமத கட்டணமாக ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த நேரிடும். வட்டி அபராதம் போன்றவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
இதனிடையே வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள வருமானவரித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியானவை முற்றிலும் தவறான தகவல் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.