வரலாற்று சிறப்பு மிக்க கீழடியில் சடங்குக்காக மட்டும் ஆய்வு நடத்தக்கூடாது என்றும் முழுமையாக 100 ஏக்கர் நிலப்பரப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
காமராஜர் நினைவு தினமான இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், கீழடியைப்போன்று ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.