வயிறு வலியால் 2 மாத கர்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கு வனிதா என்பவருடன் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.

2 குழந்தைகளுக்குத் தாயான பட்டதாரி பெண்ணான வனிதா, 2 மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் வனிதாவுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் தங்கிய வனிதா, இன்று காலை வீட்டிற்கு திரும்பியதும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வனிதாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி காவல்துறையினர் அறிவழகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராமநாதன் மற்றும் சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் விசாரணை நடத்த உள்ளனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பட்டதாரி கர்ப்பிணி வனிதா  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே