வக்ஃப் வாரிய ஆலோசகராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் நியமனம்

தமிழ்நாடு வக்ஃப் வாரிய ஆலோசகராக ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களின் வக்ஃப் சொத்துக்களை பராமரிக்க வக்ஃப் வாரியம் செயல்பட்டு வருகிறது.

வக்ஃப் வாரியத்தை நிர்வகித்து வரும் உறுப்பினர்கள் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது. புதிய உறுப்பினர்கள் தேர்தல் மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய ஆலோசகராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக்கை நியமிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.

இதையடுத்து வக்ஃப் வாரிய ஆலோசகராக சித்திக்கை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே