லண்டனில் பாஸ்போர்டை தொலைத்த நடிகர் ரஜினிகாந்த் மகள் மற்றும் மருமகன் இந்திய தூதரக அதிகாரிகளின் தலையீட்டால் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு கோவையை சேர்ந்த விசாகன் என்ற தொழிலதிபர்க்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விசாகன் சௌந்தர்யா தம்பதிகள் தங்களது பணி நிமித்தமாக லண்டனுக்கு சென்றுள்ளனர் , ஹீத்ரு விமான நிலையத்திற்கு வந்து அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டபோது கடவுச்சீட்டு வைத்திருந்த பை விமானத்தில் திருடு போனது தெரிய வந்தது .. அந்த பையில் லட்சக்கணக்கான மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்ததாக விசாகன் தெரிவித்துள்ளனர். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் இதையடுத்து அங்கு வந்த தூதரக அதிகாரிகள் உடனடியாக அவர்களுக்கு மாற்று கடவுச்சீட்டை வழங்கினர் இதையடுத்து இருவரும் சென்னை திரும்பினார். விசாகன் அளித்த புகாரின் பேரில் ஹீத்ரு விமான நிலைய அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை கொண்டு அவர்களுடைய பையை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
- மு.க. ஸ்டாலினை புகழ்ந்த பாஜக தலைவர் .
- மலேசிய கல்வி அமைச்சருக்கு நடிகை ஜோதிகா நன்றி தெரிவித்து அறிக்கை!