ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் நிழல் இல்லாத நாள் காணப்பட்டது.

ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு இருமுறை நிழல் இல்லாத சூழல் ஏற்படும். அந்த வகையில் ராமேஸ்வரத்தில் நேற்று ஆகஸ்ட் 29ம் தேதி நிழலில்லா நிலை நிலவியது. இதையொட்டி தனுஷ்கோடி அரசு நடுநிலைப்பள்ளியில் இந்த நிழல் இல்லாத நாள் குறைத்து சோதனையிடப்பட்டது. அதன்படி அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரின் உதவியுடன் பள்ளி வளாகத்தின் கம்பு,உருளை,கடிகாரம், கதவு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சோதனை செய்யப்பட்டது.

அந்தவகையில் காலை 10.50 மணிக்கு செங்குத்தாக வைக்கப்பட்ட பொருட்களின் நிழல் மேற்கு பக்கம் தோன்றிய நிலையில் நேரம் ஆக ஆக சுமார் 12.14 மணி அளவில் அந்த பொருட்களின் நிழல் முற்றிலும் மறைந்தது. பின்னர் 12.34 மணிக்கு மேல் சிறிது சிறிதாக கிழக்கு பகுதியில் நிழல் தோன்ற ஆரம்பித்தது. இதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். இந்நாட்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளை விட்டு விலகிச் செல்லாமல் இருப்பதால் இந்த நிழல் தோன்றா நிலை உருவானதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே