அமலாபால் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கேரளா போலீஸ் கடிதம்

புதுச்சேரியில் போலி இருப்பிட சான்று மூலம் பென்ஸ் கார் வாங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் நடிகை அமலா பால் மீது நடவடிக்கை எடுப்பது, தொடர்பாக புதுச்சேரி சட்டத்துறைக்கு மாநில போக்குவரத்து துறை கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டுள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அமலாபால் கடந்த 2017 ஆம் ஆண்டு புதுச்சேரியில் போலி இருப்பிட சான்றிதழ் அளித்து பென்ஸ் கார் வாங்கி பதிவு செய்ததாகவும், இதனால் சுமார் 18 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

அண்மையில் புதுச்சேரி போக்குவரத்து துறைக்கு கடிதம் அனுப்பிய கேரள மாநில போலீசார் அமலாபால் சொகுசு கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் எழுதியிருந்தனர். அதன்படி புதுச்சேரி சட்டத்துறை வல்லுனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள புதுச்சேரி போக்குவரத்து துறை இது குறித்து ஆலோசனை கேட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே