ராமேஸ்வரத்தில் ஏராளமான மீன்கள் இறந்து ஒதுங்கியுள்ளதால் அச்சம்

ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் திடீர் என்று கடல் நீரில் நிறமாற்றம் ஏற்பட்டு ஏராளமான அரிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதால் மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வளைகுடாவில் மண்டபம் கடல் பகுதியைச்சேர்ந்த குண்டுகால் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் அரிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

மேலும் கடலில் நிற மாற்றம் ஏற்பட்டு மஞ்சள் கலந்தது போல் இருப்பதையும் மீனவர்கள் கண்டு அச்சம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மண்டபத்தில் உள்ள மத்திய மீன் ஆரய்ச்சி மற்றும் தமிழக மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கடல் நீரின் மாதிரி எடுத்து ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப உள்ளனர்.

பொதுவாக ஆற்றிலோ, குளத்திலோ தான் இது போல் மீன்கள் இறந்து மிதக்கும், ஆனால் ஆயிரக்கணக்கான மீன்கள் கடலில் இறந்து ஒதுங்குவது கிடையாது என்று கூறப்படுகிறது.

எனவே நடுக்கடலில் ரசாயன கலவை கலக்கப்பட்டதா?? அல்லது கடலில் வேறுமாற்றம் நிகழ்ந்துள்ளதா?? என்பது பரிசோதையின் முடிவுக்கு பின்னரே தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே