ராகுல் டிராவிட் குறித்து தவறான தகவலை பதிவிட்ட ஐசிசி

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சிறந்த வலது கை பேட்ஸ்மேன்களுள் ஒருவருமான ராகுல் டிராவிட்டை இடது கை பேட்ஸ் மேன் என தனது இணையதள பக்கத்தில் ஐசிசி குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஐசிசியின் “ஹால் ஆஃப் பேம்” என்ற விருது வழங்கப்பட்டது. தலைசிறந்த வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை கவுரப்படுத்தும் விதமாக ஐசிசி இந்த விருதை வழங்குகிறது.

சச்சின், கபில்தேவ், அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் இந்த விருதை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த விருதுகளை வென்றோர் பட்டியலை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட ஐசிசி, அதில், வலது கை பேட்ஸ்மேனான டிராவிட்டை, இடது கை பேட்ஸ் மேன் என தவறுதலாக குறிப்பிட்டது.

இதையடுத்து இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளானது. ஐசிசி போன்ற அதிகாரப்பூர்வ அமைப்பு, உலகமே அறிந்த ஒரு வீரர் குறித்து இவ்வளவு கவனக் குறைவாக இணையத்தில் பதியலாமா?? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து தவறை உணர்ந்த  ஐசிசி உடனடியாக தனது பக்கத்தில் அதனை திருத்தம் செய்துள்ளது.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே