‘பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ரயிலில் பயணிப்பவர்கள் வீட்டில் இருந்து குடிநீர் எடுத்து வர வேண்டும்’ என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக பெற்றுக் கொள்ளும் திட்டத்தை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் மகேஷ் தொடங்கிவைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி விளம்பர பதாகைகள் அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார். மேலும் ‘இயந்திரங்கள் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்கள் நசுக்கப்பட்டு மறு சுழற்சி செய்வதற்கும் சாலை அமைப்பதற்கு வழங்கப்படும்’ என்றும் கோட்ட மேலாளர் மகேஷ் தெரிவித்தார்.