ரசிகர்கள் பேனர்கள் கட் -அவுட்டுகள் வைக்க வேண்டாம்

ரசிகர்கள் யாரும் இனிமேல் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காப்பான் திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி, இயக்குநர் கே.வி ஆனந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, சென்னையில் பேனர் விழுந்து நடைபெற்ற விபத்தில் இளம்பெண் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என்றார்.

பேனர் மற்றும் கட் ஆவுட்களை யாரும் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ரத்த தானம் , பள்ளி மாணவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட சமூக நலப்பணிகளை முன்னெடுக்குமாறு சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதையொட்டி பேனர்கள் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய்யும் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே