யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டனில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஃபோல்க் என்ற இடத்தில் யு.கே.பவர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டார்.

மேம்படுத்தப்பட்ட மின்சார உட்கட்டமைப்பு மற்றும் மின்விநியோகம், மின்சார கேபிள்கள் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். லண்டன் மற்றும் இங்கிலாந்தில், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மின்சார கேபிள்கள் சாதனங்களை பொருத்துதல் பராமரித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளை இந்த நிறுவனம் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லண்டன் நகரில் உள்ள 200 ஆண்டு பழமையான அத்தீனியம் சங்கத்தை முதல் அமைச்சர் பார்வையிட்டார். அவரை வரவேற்ற தமிழ் மற்றும் இந்திய வம்சாவளியினர் தென்னிந்தியா விருந்து அளித்து கவுரவித்தனர். கௌரவமிக்க அத்தீனியம் சங்கத்தை சேர்ந்த 52பேர் இதுவரை பல்வேறு துறைகளில் நோபல் பரிசை வென்றுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே