யார் அரசியலுக்கு வந்தாலும் அ.தி.மு.கவை அசைக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும், அவர் கட்சி தொடங்கினால் தாம் வரவேற்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மஹிந்திரா வேல்சிட்டி வளாகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் முன்னணி நிறுவனங்கள் இணைந்து 1.5 லட்சம் மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் “யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது” என்றார்.

மேலும் அவர், “மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் நாங்கள், நிரந்தரமாக மக்கள் மனதில் நிறைந்தவர்கள் நாங்கள், எந்நாளும் மக்களுடைய அங்கீகாரம் எங்களுக்குத்தான்” என கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே