சென்னையில் வாகன ஓட்டி ஒருவர் தனது மூன்றரை வயது குழந்தைக்கு தலை கவசம் அணிவித்து சென்றதற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
இருசக்கர வாகனம் ஓட்டுவோரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஐயனாவரத்தைச் சேர்ந்த ஜனார்தன் என்பவர் தானும் தலைகவசம் அணிந்ததுடன், தன் மூன்றரை வயது குழந்தைக்கும் தலைக்கவசம் அணிவித்து அழைத்துச் சென்றார்.
போக்குவரத்து விதிமுறைகளை மதித்து முன்மாதிரியாக செயல்பட்ட ஜனார்தனையும், அவரது மூன்றரை வயது குழந்தையையும் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் இந்த நிகழ்வின்போது உடனிருந்தார்.