முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பாசனத்திற்காக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள 14707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற ஜூன் முதல்வாரம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததாலும், அணையின் நீர்மட்டம் 116 அடியாக இருந்ததாலும் தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அணையின் நீர்மட்டம் 131 அடியை தாண்டியதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார். வினாடிக்கு 300 கன அடி வீதம் 120 நாட்களுக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.