முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை

ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

IRCTC மூலம் அங்கீகாரம் இல்லாத மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அதிக அளவில் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யப்படுவது ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் ஆபரேஷன் தண்டர் என்ற பெயரில் கடந்த 3 நாட்களாக ரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை நடத்தி வந்தனர்.

அதில் முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்து வந்த 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து காலாவதியான மற்றும் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்யப்பட்டிருந்த 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கணினிகள் செல்போன்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே