திருச்செந்தூர் அருகே உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமியை வேண்டி மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.
நவராத்திரி தினத்தை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வரும் செப்டம்பர் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இதில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி வேண்டுதலுக்காக மாலை இட்டு தங்களது விரதத்தைத் தொடங்கி உள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மஹிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் எட்டாம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது.