முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் ஆர்வம்

கடந்த 10 நாட்களில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 984 ரூபாய் உயர்ந்துள்ளது.

பங்குச்சந்தை வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்த வருவதோடு உள்நாட்டு சந்தையிலும் எதிரொலித்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை தாண்டும் என நகை வணிகர்கள் கூறியுள்ள நிலையில், திருமணத்திற்கு காத்திருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே