முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் வெற்று அறிவிப்புகள் – மு.க.ஸ்டாலின்

முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களும், தற்போது அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களும் வெற்று அறிவிப்புகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தின் மேலாளர் பத்மநாபன் இல்லத் திருமண விழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.அப்போது மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறியுள்ளது எனக் குற்றம்சாட்டியனார்.

இன்னும் 7,8 அமைச்சர்கள் வெளிநாடு செல்லவிருக்கும் செய்தி தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இரு முறை நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அவற்றின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே