தான் ஒரு விவசாயி என பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் வெள்ளை வேட்டி சட்டை சகிதமாக நெற்றியில் விபூதியுடன் காட்சியளித்தார். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது கூட தான் ஒரு விவசாயி, ஒரு தொழிலதிபர் அல்ல எனக் கூறிச் சென்றார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் கோட் சூட்டுடன் இருக்கும் புகைப்படங்களும் வீடியோவும் தான் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. வேட்டி சட்டை அவருக்கு பொருத்தமாக இருப்பது போலவே கோட்சூட்டும் கனகச்சிதமாக பொருந்துவதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அவரை லண்டனில் முதல் முறை கோட் சூட்டில் பார்த்த அதிகாரிகள் பாராட்டியபோது வெட்கத்தால் அவரின் முகம் சிவந்ததாக அருகிலிருந்து பார்த்தவர்கள் கூறுகின்றனர். லண்டனில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் காலையில் தென்னிந்திய சிற்றுண்டி பரிமாறப்பட்ட போது அது இந்தியாவில் இருப்பது போன்றே சுவையாக இருப்பதாக முதல்வர் பாராட்டினாராம். நம் நாட்டு உணவை பிரிட்டனில் சாப்பிட்ட உற்சாகத்துடனே அவர் பேச்சுவார்த்தைக்கு புறப்பட்டுச் சென்றார்.

கோட் சூட்டில் அவர் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் வீடியோ காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையதளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே