தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி இணையதளம் கடந்த சில மணி நேரமாக முடங்கியுள்ளது, ரயில் பயணிகளின் முன்பதிவு வசதிக்காக ரயில்வே துறையால் ஐஆர்சிடிசி என்கிற இணையதளம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை ஐந்து மணியிலிருந்து ஐஆர்சிடிசி இணையதளத்தில் எந்த ஒரு பயணங்களுக்கான முன்பதிவும் செய்ய முடியவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள் .
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது மேலும் இந்த தொழில்நுட்ப கோளாறு எப்போது சரியாகும் என்று ஐஆர்சிடிசி நிறுவனம் சார்பாக இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை, இதனால் ரயிலில் முன்பதிவு செய்யும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.