சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் ஊடக நிறுவனங்களின் அணிகள் பங்கேற்கும் மீடியா டிராஃபி கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் மீடியா டிராஃபி போட்டி ஊக்கப்படுத்தும் விதமாக தனது ஒரு மாத ஊதிய தொகை ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். பிரபல ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் 16 அணிகளாக பிரிந்து விளையாடும் இந்த கிரிக்கெட் தொடருக்கு மீடியா டிராஃபி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது