மிஸஸ் இந்தியா விருதுக்கு குஜராத்தைச் சேர்ந்த பூஜா தேசாய் தேர்வு

குஜராத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண் பூஜா தேசாய் மிஸஸ் இந்தியா பட்டத்தை இந்த ஆண்டு வென்றுள்ளார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பூஜா தேசாய் வதோதராவில் தமது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

நாடு முழுவதிலும் இருந்து 4500 பெண்கள் போட்டியிட்டதில் பூஜா தேசாய் 100 பேர் பட்டியலில் இடம் பிடித்து கடந்த 9ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலிடத்தை வென்றுள்ளார்.

வீட்டோடு நகை வியாபாரம் செய்து வரும் பூஜா தேசாய்க்கு மிஸஸ் இந்தியா விருதும், மூத்த பாலிவுட் நடிகை பத்மினி கோலாபுரிக்கு இந்தியா பிரைடு ஆப் நேசன் விருதும் வழங்கப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே