“மா உலா” பைக் டாக்ஸி சேவை… மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் திருச்சியில், வாகனபோக்குவரத்தும், நெரிசலும் அதிகரித்துள்ள நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்ட திருச்சியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், ஒன்று சேர்ந்து, “மா உலா” என்ற பைக் டாக்சி சேவயை தொடங்கி உள்ளனர். தாங்கள் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனத்தையே பைக் டாக்சியாக மாற்றியுள்ளனர்.

சத்திரம் பேருந்து நிலையம், கோட்டை ரயில் நிலையம், காந்தி மார்க்கெட், புத்தூர், ரயில்வே ஜங்ஷன், பால் பண்ணை ஆகிய பகுதிகளில் பைக் டாக்ஸி பொதுமக்களுக்காக காத்து நிற்கிறது.

செல்ல வேண்டிய இடம் குறித்து இந்த, மா உலா பைக் டாக்ஸியை அணுகினால், பின்னால் அமரவைத்து ஓட்டிச்சென்று குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டுபோய் சேர்த்து விடுகிறார்கள்.

எவ்வளவு குறைந்த தூரம் என்றாலும், அதற்கான கட்டணத்தை பேசி பயணிகளை அழைத்து செல்கின்றனர்.

குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடிவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த பைக் டாக்ஸியை 9940409926 என்ற அலைபேசி எண்ணிலும் அல்லது மா உலா என்ற ஆப்பை டவுன்லோடு செய்தும் அழைக்கலாம்.

தங்களது முயற்சிக்கு காவல்துறையினரும், போக்குவரத்து அலுவலர்களும் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே