மார்பக பிரச்சினைகளை கூச்சமின்றி கூறவேண்டும் – நடிகை வரலட்சுமி

மார்பகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் பெண்கள் கூச்சப்படாமல் தெரிவிக்கவேண்டும் என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இதில் விமான நிலைய இயக்குநர் ஸ்ரீகுமார், காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி, திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியென்பதால் வளாகம் முழுவதும் பிங்க் நிறத்தால் ஆன பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை வரலட்சுமி சரத்குமார், மார்பக புற்றுநோய் குணப்படுத்தப்படக்கூடிய ஒன்றுதான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே