மாணவர்கள் மத்தியில் மாஸ் காட்டிய கமல்

கரைவேட்டி கட்டி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் தான் அரசியலில் கறை படிந்திருக்கிறது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விமர்சித்திருக்கிறார்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது என்று கூறினார்.

மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்த மொழியையும் தான் எதிர்க்கவில்லை என்றும், தொடர்பியல் கருவியான மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

அதேபோல உணவகங்களில் எதை உண்ண வேண்டும் என்பதை வாடிக்கையாளரே முடிவு செய்யமுடியும், நிர்வாகம் அல்ல என்பதை போலவே “மொழியும்” என்று அவர் விளக்கினார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் தமிழ் நாட்டில் வாரிசு அரசியலை ஒழிக்க முடியாது என்றால், தமிழ்நாடு முழுவதும் தனது குடும்பம் என கருதி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே