ராட்சசி திரைப்படத்தை பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சருக்கு நடிகை ஜோதிகா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்திய படம் ஒன்றை பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி அதைப்பற்றி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ராட்சசி படத்தில் பணியாற்றியவர்கள் 90 சதவிகிதம் பேர் அரசு பள்ளியில் பயின்றவர்கள் என்றும், அனைவருக்கும் தராமன கல்வி மற்றும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த படம் எடுக்கப்பட்டதாகவும் தோதிகா தெரிவித்துள்ளார்.
மேலும், ஜாதி, மதம், மொழிகளை கடந்து ராட்சசி திரைப் படத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தோதிகா குறிப்பிட்டுள்ளார்.