மலேசிய இறக்குமதி பொருட்களுக்கு 5% சுங்க வரி உயர்வு

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான சுங்க வரியை 5 சதவிகிதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. பாமாயில் போன்ற உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கான வணிகத்தை பாதுகாக்கும் வகையில் வர்த்தகத்துக்கான இயக்குனரகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆறு மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே