தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தேனி மாவட்டத்தில் இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன் என்று தெரியவந்தது. இந்த சிறுவன் அதே பகுதியில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட சிறுவனை கைது செய்த போலீசார் லட்சுமிபுரத்தில் உள்ள இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் மாஜிஸ்திரேட்டு பன்னீர் செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சிறுவன் மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் அவரை மாஜிஸ்திரேட்டு ஜாமீனில் விடுதலை செய்து அவருடைய பெற்றோர் பாதுகாப்பில் அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காப்பக உரிமையாளர் டாக்டர் சரவணன் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய நண்பர்களுக்கு ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார். அவர் கொடுத்த விளக்கம் அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் சரவணன் கொடுத்த விளக்கம்.