மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பிளாஸ்டிக் சர்ஜரி மின் அறையில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இதை கவனித்த நோயாளிகளின் உறவினர்கள் சத்தமிட்டனர். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர். மேலும் நோயாளிகளை மற்றொரு வார்டுக்கு மாற்றினர்.
அதை தொடர்ந்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் நோயாளிகள் விட்டுச்சென்ற பழைய தலையணை மற்றும் போர்வை மூலம் தீ பரவியதாக மருத்துவமனை மேற்பார்வையாளர் சங்குமணி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.