மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

2014ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, அக்டோபர் 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஹரியானா, மகாராஷ்டிர சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கும் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த தேர்தலில் 122 இடங்களில் பாஜக வென்றது.

63 தொகுதிகளில் வென்ற சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. அங்கு மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுமா தனித்தனியே போட்டியிடுமா என்பது உறுதியாகவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இரு கட்சிகளும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. அங்கு பாஜக ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.

கடந்த 8ஆம் தேதி ரோஹ்டக்கில், மக்கள் ஆசீர்வாத யாத்திரையில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே