ராஜஸ்தானில் லாரி ஒன்றுக்கு நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்தி 700 ரூபாய் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் தொகை வசூலிக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்றுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்தி 700 ரூபாய், அபராதத்தை போலீசார் விதித்துள்ளனர்.
பகவான் ராம் என்ற நபருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட பின் நாட்டிலேயே அதிக அளவில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக இது கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.