பொலிவியா நாட்டு எல்லையில் பற்றி எரியும் அமேசான் காடுகள்

பொலிவியா நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க பிரான்ஸ் மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களது படைகளை அனுப்பி வைத்துள்ளனர். உலகின் நுரையீரலாக இருக்கும் அமேசான் மழைக்காடுகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது.

இதில் அரியவகை உயிரினங்கள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. பிரேசில், பராகுவே, பெரு உள்ளிட்ட நாடுகளில் எல்லையில் பரந்து விரிந்துள்ள அமேசான் மழைக்காடுகள் அழிந்து வருவதற்கு பிரேசில் அதிபர் Jair Bolsonaro தான் காரணம் என்று பல தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்க பொலிவியா நாட்டின் அதிபர் Evo Morales பிரான்ஸ் மற்றும் ரஷ்ய நாட்டின் உதவியை நாடினார். அதனை ஏற்று பிரான்ஸ் மற்றும் ரஷ்யா தீயணைப்பு வீரர்கள் பொலிவியா வந்துள்ளனர். மேலும் தீயை தண்ணீர் ஊற்றி அணைப்பதற்கு உதவியாக விமானம் ஒன்றையும் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 394 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே