பொருளாதார வீழ்ச்சியால் எல்ஐசி நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதன் தென்மண்டல மேலாளர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
அனைத்து துறையிலும் கால் பதிக்கக் கூடிய வகையில் எல்ஐசி நிறுவனம் தற்போது வங்கி துறைகளிலும், ஐடிபிஐ வங்கி மூலம் கால் பதித்து உள்ளதாகவும் தெரிவித்தார். எல்ஐசி தொடங்கப்பட்டு 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வரை இந்தியா முழுவதும் 30 கோடி நுகர்வோரை கொண்டு இயங்கும் ஒரே நிறுவனம் எல்ஐசி என்ற பெருமையை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வருடத்தில் மட்டும் எல்ஐசியில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நுகர்வோர்கள் இணைந்து உள்ளதாகவும் கதிரேசன் குறிப்பிட்டார்.