’பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்’ – களம் காண இருக்கும் சென்னை மாநகராட்சி

பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் களமிறங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது.

சென்னை மக்கள் “நம்ம சென்னை” என்ற செயலி மூலமும், 1913 என்ற தொலைபேசி வாயிலாகவும் தங்கள் புகார்களை பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொதுமக்களிடம் தொடர்பில் இருக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கணக்கு தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்களின் தெரிவிக்கும் புகார்களுக்கு, உடனடியாக தீர்வு காணப்பட்டு அவை பதிவு செய்யப்படும் என்றும் இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

அடுத்த மூன்று மாதங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே