உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பிவி சிந்து தங்கம் வென்றதை இந்தியாவே கொண்டாடிய நிலையில் அதே தொடரில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனையை கௌரவிக்க இந்தியா மறந்துவிட்டது.
உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் ஸ்விட்ஸ்ர்லாந்தில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து தங்கம் வென்று அசத்தினார். அவருக்கு இந்தியா முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்தன. இதனிடையே மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பாரா உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மானஷி ஜோஷி 21-11 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த தொடரில் அவர் பெற்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதனிடையே பிவி சிந்துவை கொண்டாடிய மக்கள் மற்றும் அரசுகள் மானஷி ஜோஷியை மறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே மானஷி ஜோஷிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.