புதுச்சேரியில் இன்று காலை நேற்று நடைபெற்ற சம்பவம் இன்று காலை தான் போலீசுக்கு தெரிய வந்துள்ளது .

புதுச்சேரியில் பிரபல ரவுடியாக இருந்தவர் குமார் . இவர் நேற்று இரவு அப்பகுதி அருகே இருக்கக்கூடிய காளியம்மன் தோப்பு பகுதியில் இவர் முகத்தில் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளார், இவர் நேற்று அதாவது அந்த பகுதியில் இருக்கக்கூடிய தில்லை காளியம்மன் கோவிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வந்தது, இந்த விழாவில் நேற்று அவர் கலந்து கொண்டிருந்தபோது கோவில் ஏசி திடலில் இருந்து சென்ற போது முகத்தை மூடிக் கொண்டு சென்ற ஒரு மர்ம கும்பல் குமார் அங்கு இருப்பதை தெரிந்து அந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் அங்கிருந்த சிலர் படுகாயமடைந்த நிலையில் ரவுடியான ரவிக்குமார் தப்பியோடி உள்ளார், தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர், விசாரணையில் அது போன்று எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்று கூறினார்கள். இதனை அடுத்து இன்று காலை அருகே அதே இடத்தில் அதாவது காளியம்மன் கோவில் அருகே இருக்கக்கூடிய இடத்தில் இருந்து சற்று தூரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலை காரில் வந்த மர்ம நபர்களால் முதலில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சி நடந்துள்ளது அந்த முயற்சி தோல்வி அடைந்ததால்
அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் . இந்த தகவலை காவல்துறையினர் க்கு இன்று காலை தான் தெரிய வந்துள்ளது, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார் , ஏற்கனவே அவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் இருப்பதும் தற்போது தான் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது . பிரபல ரவுடி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.