“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்னும் தலைப்பில் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ”பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்னும் சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் பார்வையிட்டார்.

இம்முகாமில் மொத்தம் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு,

  • தானிய வகைகள், சணலால் செய்யப்பட்ட பைகள்,
  • செம்பினால் ஆன தண்ணீர் குவளைகள்,
  • தேங்காய் ஓடுகளால் ஆன கலை பொருட்கள்,
  • மரப்பேனா,
  • பாக்குமட்டை,
  • பனை ஓலை,
  • கரும்பு சக்கையினால் செய்யப்பட்ட பொருட்கள், உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே