பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு சேவை வாரம் கடைப்பிடிக்கும் பாஜக

பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி பிறந்த நாள் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பாஜக இன்று முதல் சேவை வாரம் கடைப்பிடிக்கிறது. இதைத் தொடங்கி வைக்கும் வகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர், அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறார்களுக்கு பழங்கள் அடங்கிய முடிப்புகளை வழங்கினர்.

பின்னர் அவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியிலும் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, “தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தேசத்திற்காகவும், ஏழைகளுக்காகவும் அர்ப்பணித்த பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, சேவை வாரம் கொண்டாடப்படுவதாக” தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே