பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

மொஹரம் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் உலக அமைதிக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல், அப்பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசல் ஆகும். இந்நிலையில் மொஹரம் தினத்தை முன்னிட்டு ஜாமியா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், காஷ்மீரில் அமைதி திரும்பவும் சிறப்பு துவா செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே