மிரர் நவ் தொலைகாட்சியில் நேற்று நடந்த நேரலையில் நிகழ்ச்சியை ஒருகினைத்த நெறியாளர் கடுமையான கோபத்துடன் நடந்து கொண்டார் , இது பற்றி தன்னுடைய நேயர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் .
நல்ல ஒரு விஷயத்தை பற்றி நாம் விவாதித்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது? நமக்கு நல்ல காற்று, குடிநீர், கல்வி சுகாதாரம் பற்றி என்றைக்காவது நாம் விவாதிக்கிறோமா? எப்பவும் இஸ்லாம் மதம் தீவிரவாதம், கிருத்தவர்கள் மதம் மாற்றம் செய்கிறார்கள், ஹிந்துக்கள் அபரிக்க முயற்சிக்கிறார்கள் என்றுதானே விவாதிக்கிறோம். இந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரருக்கு கூட சுவாசிக்க நல்ல காற்று இல்லை.
இதுவரை நான் இவ்வாறு கோபப்பட்டதில்லை, ஆனால் என்னுடைய நேயர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது நமக்கு தேவையான விசயங்களை மட்டுமே நாம் விவாதிப்போம், வெறுப்பை வளர்கின்ற எந்த விவாதங்களையும் நாம் மேற்கொள்ளப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.