நீதிபதி பதவிக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வழக்கறிஞர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 13 நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் புதிய அறிவிப்பால் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் நீதிபதியாக பதவி ஏற்க நேரிடும் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழக்கறிஞர்கள் போராட்டம் நாளையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற பணிகள் தேக்கமடையும் சூழல் உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே