நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவுப்பு வெளியாகி உள்ளது.
இது பற்றி செய்தி வெளியிட்டிருக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா ‘வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும்’ என்றும் ‘வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அன்று மாலையே வெளியிடப்படும்’ என்று கூறியுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இன்றுமுதல், நாங்குநேரி, மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.