நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிப்பு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு போட்டியிட 25க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர்.

அவர்களிடம் நேர்காணல் முடிந்த நிலையில், வேட்பாளர் யார்?? என்பதை இறுதிசெய்ய கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி டெல்லி சென்றிருந்தார்.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை கட்சித் தலைவர் சோனியாகாந்தி அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

ரூபி மனோகரன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே